பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்த வருண்..வருடாந்திர ஊதியம் இவ்வளவா?

பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் A+ பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர " ஜடேஜா இடம்பெற்றுள்ளனர்.

Team India

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை) இந்திய ஆண்கள் அணிகளுக்கான வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தங்களை (Annual Player Retainership) அறிவித்துள்ளது. வடிவங்களில் அவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நான்கு தரவரிசைகளாக (Grade A+, A, B, C) பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தொகை பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024-25 சீசனுக்கான ஒப்பந்தப் பட்டியலில் மொத்தம் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கீழே தரவரிசை வாரியாக வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Grade A+ (4 வீரர்கள்)

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

Grade A (6 வீரர்கள்) 

ஆர். அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல். ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா,

Grade B (5 வீரர்கள்)

சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர்

Grade C (19 வீரர்கள்)

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், ரஜத் பட்டிதார், துருவ் ஜுரேல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா

மேலும், இதில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் 2023-24 சீசனில் இஷான் கிஷன் (Grade C) மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் (Grade B) ஆகியோர் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை, உள்நாட்டு கிரிக்கெட்டில்  அவர்கள் பங்கேற்கவில்லை என்பதால் அவர்களை தேர்வு செய்யாமல் பிசிசிஐ அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இருப்பினும், 2024-25 சீசனில் ஷ்ரேயஸ் ஐயரை (b)யிலும் இஷானை (c)யிலும்  தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் மீதான மறு நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஒப்பந்தங்களின் விவரங்கள்

Grade A+: ஆண்டு ஊதியம்: ரூ.7 கோடி

இந்த தரவரிசை பட்டியலை பொறுத்தவரையில் இந்திய அணியின் மிக உயர்ந்த மற்றும் முக்கிய வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) தொடர்ந்து சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் அணியின் தலைமைப் பொறுப்புகளை வகிப்பவர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள்.

Grade A: ஆண்டு ஊதியம்: ரூ.5 கோடி

Grade A தரவரிசையில் அனுபவமிக்க மற்றும் நிலையான செயல்பாடு கொண்ட வீரர்கள் இடம்பெறுகின்றனர். இவர்கள் அனைத்து வடிவங்களிலும் முக்கிய பங்களிப்பை அளிப்பவர்கள் அல்லது குறிப்பிட்ட வடிவங்களில் (எ.கா., டெஸ்ட் அல்லது ஒருநாள்) மிகவும் முக்கியமானவர்கள். இந்த தரவரிசையில் இடம்பெறும் வீரர்களை பொறுத்தவரையில், அணியின் மூத்த உறுப்பினர்களாகவோ அல்லது எதிர்காலத்தில் Grade A+ தரவரிசைக்கு முன்னேற வாய்ப்புள்ளவர்களாகவோ இருக்கின்றனர்.

Grade B: ஆண்டு ஊதியம்: ரூ. 3 கோடி

Grade B தரவரிசையில் உள்ள வீரர்கள் அணியில் முக்கிய இடத்தைப் பிடித்தவர்கள், ஆனால் Grade A அல்லது A+ வீரர்களைப் போல அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தாதவர்கள். இவர்கள் (டி20 அல்லது டெஸ்ட்) போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர்களாக இருப்பார்கள்.

Grade C: ஆண்டு ஊதியம்: ரூ. 1 கோடி

Grade C தரவரிசை பொறுத்தவரையில் புதிதாக அணியில் இடம்பெற்ற வீரர்கள், குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட் மட்டும் சிறப்பாக விளையாட கூடியவர்கள் இந்த தரவரிசையில் இடம்பெறுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்