இந்திய அணி 190 ரன்கள்!!விராட்,தோனி,ராகுல் அபாரம்!!

முதலில் பேட் செய்த இந்திய அணி 190  ரன்கள் அடித்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது

முதலில் பேட் செய்த இந்திய அணி 190  ரன்கள் அடித்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

லோகேஷ் ராகுல் சரவெடியாக வெடித்து, அவர் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார்.தவான் கடுமையாக போராடி 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் ஆறு பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்து வெளியேறினார்.

unknown node

இதன் பின்னர் இந்திய அணி 20 ஒவர்களின் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 190  ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி  72*  ரன்கள் அடித்தார்.தோனி 40 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார் .  இதன் பின்னர் 191 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.