இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
unknown nodeநேற்று நடந்த முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் டி20 போட்டிகளில் அதிவிரைவாக ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைக்க கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு உள்ளது.
டி20 தொடரில் பாபர் அசாம் 26 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 27 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
unknown nodeஆனால் கே.எல் ராகுல் 24 போட்டிகளில் 879 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் ஆயிரம் ரன்கள் எடுக்க 121 ரன்கள் தேவை ஒரே போட்டியில் கே.எல் ராகுல் 121 ரன்கள் எடுத்தால் முதல் இடத்தை பிடிப்பார்.121 ரன்களை இரண்டு போட்டிகளில் அடித்தால் பாபர் அசாம் உடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்வார்.