Wanindu Hasaranga: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா திரும்ப பெற்றுள்ளார். 26 வயதான வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளிலும் பங்கேற்று பிரகாசித்து வருகிறார்.
Read More –ஒருவருடன் ஒருவர் மோதல் ..! இளம் வங்கதேச வீரர் மருத்துவமனையில் அனுமதி !
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறப் போவதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் அறிவித்தார். இதுதொடர்பாக தனது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் (எஸ்எல்சி) தெரிவித்து விட்டதாகவும், தனது முடிவை வாரியம் ஏற்றுக் கொண்டதாகவும் ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா தெரிவித்திருந்தார்.
Read More –IPL 2024 : தொடரும் சோகம் ..! சி.எஸ்.கே அணிக்கு 3-வது இடி !
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஹசரங்கா தற்போது திரும்ப பெற்றுள்ளார். அதன்படி, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஏப்ரல் 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளில் ஹசரங்கா விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
unknown node