நங்கள் சிறப்பான அணி என்று கூற விரும்பவில்லை- ஸ்டீபன் பிளமிங்..!!

"We do not want to say that we are a good team," said Chennai coach Stephen Fleming

நங்கள் சிறப்பான அணி என்று கூற விரும்பவில்லை என்று சென்னை அணியின் பயிற்ச்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் பேசிய சென்னை அணியின் பயிற்ச்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியது ” இந்த போட்டியில் நிறைய விஷயங்கள் எங்களுக்கு எதிராக இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் அதிகம் தவறு செய்யவில்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்று யோசித்து  எங்கள் அணுகுமுறையில் சில மாற்றங்களைச் செய்தோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னையில் விளையாடவில்லை என்றாலும் சிறப்பாக மற்றும் வேகமாக விளையாடுவதன் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதைத்தான் தற்போது எங்கள் அணி செய்து வருகிறது. எங்கள் அணி  சிறப்பான அணி என்று நான் கூற விரும்பவில்லை ஆனால் தற்போது மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.