காசு வேணாம் எங்க நாடு தான் முக்கியம்! IPL நிர்வாகம் கொடுத்த சலுகையை உதறி தள்ளிய ஹெட், கம்மின்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டை விட்டுவிட்டு உலகம் முழுவதும் உள்ள டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக, ஐபிஎல் அணி குழுவிடமிருந்து ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள சலுகை வாய்ப்பை வேண்டாம் என பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் நிகாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Cummins AND Head

ஆஸ்திரேலியாவின் ODI மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் பேட் கமின்ஸ் மற்றும் ஸ்டார் பேட்டர் டிராவிஸ் ஹெட் ஆகியோர், IPL அணிகளின் குழுவிடமிருந்து ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் 84 கோடி ரூபாய்) சம்பளத்துடன், சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகி உலக T20 லீகுகளில் முழு நேரம் விளையாடும் ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள தகவல் தான் கிரிக்கெட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியான தகவலின் படி, இந்த இரு வீரர்களும் தேசிய கடமைகளுக்கு உறுதியாக இருக்க விரும்புவதால் இந்த வழக்கமான சம்பள ஒப்பந்தத்தை மறுத்துவிட்டனர். அவர்களின் மேனேஜ்மென்ட் இந்த விவரங்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆஸ்திரேலியா தேசிய அணியின் சுயரிச்சின்முறை ஒப்பந்தங்கள் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டாலர் (சுமார் 12.6 கோடி ரூபாய்) சம்பளம் வழங்குகின்றன. கமின்ஸ் கேப்டன்சி பணியின் கூடுதல் சம்பளத்துடன் ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர் (சுமார் 25.2 கோடி ரூபாய்) பெறுகிறார்.

IPL-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியில் கமின்ஸ் 18 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார், அதேபோல் ஹெட் 2025 சீசனுக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த வீரர்கள் ஆஸ்திரேலியாவின் முக்கிய சொத்துகளாக இருந்தாலும், T20 லீகுகளின் செல்வத்தை விட தேசிய கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். அதன் காரணமாக தான் இந்த சலுகையையும் நிகரித்துள்ளார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை தகவல்கள்களாக மட்டும் தான் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா, மாநில சங்கங்கள் மற்றும் வீரர்கள் யூனியன் இடையே பிக் பாஷ் லீக் (BBL) தொடரை தனியார்மயமாக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. கமின்ஸ் மற்றும் ஹெட் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இத்தகைய ஒப்பந்தங்கள், சர்வதேச கிரிக்கெட்டின் மாறும் களத்தை உதாரணமாகக் காட்டி, BBL-க்கு தனியார் முதலீட்டை ஈர்க்கும் தேவையை வலியுறுத்துகின்றன. இந்த முதலீடுகள் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தி, T20 லீகுகளை உலகளாவிய ஃப்ரான்சைஸ் உரிமையாளர்களின் வலையமைப்புடன் இணைக்கும்.

2023ல் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி ஆங்கிலேய வேகப்பந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஆண்டுக்கு 7.5 மில்லியன் டாலர் (சுமார் 63 கோடி ரூபாய்) ஒப்பந்தத்தை வழங்கி, சர்வதேச கிரிக்கெட்டை விட்டு T20 லீகுகளில் முழு நேரம் விளையாடச் சொன்னது. ஆனால் ஆர்ச்சர் அதை நிராகரித்தார். இந்நிலையில், இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு பெற்று, உலக T20 லீகுகளில் விளையாடத் தொடங்கினார். T20 லீகுகளின் செல்வம் உலக வீரர்களை ஈர்க்கும் நிலையில், BCCI, ECB, கிரிக்கெட் ஆஸ்திரேலியா போன்ற பெரிய போர்டுகள் தங்கள் திறமையை தக்கவைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.