லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 5 போட்டிகளை கொண்ட இத்தொடரில், இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வென்றது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை விருந்தினர் அணி இந்தியா வென்றது. தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, சமநிலையில் உள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10 […]
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது, மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புகாரின்படி, அந்தப் பெண் தயாலுடன் ஐந்து வருட உறவில் இருந்ததாகவும், அப்போது அவர் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியின் பேரில் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சுரண்டியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், யாஷ் மீது வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவின் 400 ரன்கள் என்ற உலக டெஸ்ட் சாதனையை முறியடிக்க 34 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 626/5 என்ற ஸ்கோரில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனெனில் முல்டருக்கு லாராவின் வரலாற்று சாதனையை […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி, ஜூலை 7, 2025 அன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் தோனி, கிரிக்கெட் உலகில் தனது தலைமைத்துவத்திற்கும், அமைதியான புன்னகைக்கும் பெயர் பெற்றவர். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்கள். அவர் பிறந்த நாள் இன்று என்பதால் […]
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது. இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, திருப்பூர் தமிழன்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜாவின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு விளையாடிய திண்டுக்கல் […]
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டு போட்டி முடிவில் 1-1 என தொடரை சமன் செய்தது. இதன் மூலம் 58 ஆண்டுகால தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் முடிந்திருந்த எட்ஜ்பாஸ்டனின் பழைய பதிவை மாற்றியமைத்தது. இந்த போட்டியில், இந்தியாவுக்காக பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் […]
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில் (ஜூலை 5, 2025, லீட்ஸ்) 52 பந்துகளில் அபாரமான சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த 14 வயது இளம் வீரர், இந்த சதத்துடன் தனது திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தியதுடன், அடுத்த போட்டியில் இரட்டை சதம் (200 ரன்கள்) அடிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது உத்வேக மூலமாக […]
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இந்த அபாரமான ஆட்டம் இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் என்ற மாபெரும் ஸ்கோருக்கு உயர்த்தியது. இதுகுறித்து இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் ஜீத்தன் படேல், ஜூலை 5, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசினார். “சுப்மன் கில் ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவரைப் பார்த்து […]
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ் பிரிவின் முதல் நாள் ஆட்டத்தில் (ஜூலை 5, 2025), தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி. குகேஷை, சக தமிழக வீரரான ஆர். பிரக்ஞானந்தா வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தப் போட்டி, இந்திய செஸ்ஸின் உலகளாவிய ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இரு இளம் வீரர்களின் திறமையையும் வெளிப்படுத்தியது. பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி, குகேஷுக்கு […]
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டியின் ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார். 19 வயதான இந்த இந்திய கிராண்ட்மாஸ்டர், 18 புள்ளிகளில் 14 புள்ளிகளைப் பெற்று, முதல் இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து ஆறு வெற்றிகளைப் பெற்று, ஒரு தோல்வி மற்றும் இரண்டு டிராக்களுடன், உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்ஸனை ஆறாவது சுற்றில் வீழ்த்தியதன் மூலம் போட்டியில் […]
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 587 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 64 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து இந்தியா அணி 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்கள் எடுத்திருந்தது, இதன் அடிப்படையில் அவர்களுக்கு 180 ரன்கள் […]
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால் (269) இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்துள்ளது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து முதலில் தடுமாறினாலும், ஸ்மித் மற்றும் புரூக் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஒரு தலைவலியாக மாறிவிட்டனர். ஆம், ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் இடையே 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் உள்ளது. இருவரும் அற்புதமாக பேட்டிங் செய்கிறார்கள். […]
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று விளையாடிய கேப்டன் கில் 269 ரன்களை சேர்த்தார். அவருக்கு துணையாக ஜடேஜா(89), வாஷிங்டன் சுந்தர்(42) சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். வலுவான ஸ்கோரை முதல் இன்னிங்சில் இந்திய அணி எடுத்துள்ளது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆகாஷ் தீப் 3-வது ஓவரில், கடந்த டெஸ்டில் சதம் அடித்த டக்கெட்(0), […]
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் குவித்து இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் இந்தியா 587 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது, இதில் கில்லின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்த அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து, சுப்மன் கில் தனது தந்தை லக்ராஜ் சிங் கில் அழைத்து வாழ்த்தியதாகவும், ஆனால் முச்சதத்தை […]
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்) மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை (நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2025, சென்னை மற்றும் மதுரை) போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் ஜூனியர் அணிகளுக்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு, உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பல நாடுகள் பங்கேற்கும் […]
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி “முழுமையான மாஸ்டர்கிளாஸ்” என்று பாராட்டியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை 77/3 என்ற நிலையில் 510 ரன்கள் பின்தங்கிய நிலைக்கு தள்ளியது. இந்த அளவுக்கு இந்திய சிறப்பான ரன்களை குவிக்க காரணமே கில்லின் இந்தப் புரட்சிகரமான 269 ரன்கள் தான். இந்த இரட்டை […]
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின் ஆறாவது சுற்றில், உலகச் சாம்பியன் டி. குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வெற்றி, குகேஷின் ஐந்தாவது தொடர் வெற்றியாகும், மேலும் அவர் 10 புள்ளிகளுடன் தனித்து முன்னிலை வகிக்கிறார். நார்வே செஸ் 2025 போட்டியில் கார்ல்சனை முதன்முறையாக வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்த ரேபிட் […]
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். பர்மிங்காம் மைதானத்தில் கில் 311 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் கில்லின் முதல் இரட்டை சதமாகும். 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அவர் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். நிதானமாக விளையாடிய கில் இங்கிலாந்து அணியின் பத்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய கில் டெஸ்ட் அரங்கில் […]
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வெறும் 28 வயதுதான். அந்நாட்டு ஊடக அறிக்கையின்படி, அவரது கார் ஸ்பெயினில் விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், அவரது சகோதரர் ஆண்ட்ரேவும் அவருடன் காரில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். ஆண்ட்ரேவும் 26 வயது கால்பந்து வீரர் ஆவார். ஜோட்டாவின் திருமணத்திற்கு 10 நாட்களுக்குப் பிறகு இந்த துயர சம்பவம் நடந்தது. அவர் […]
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை போட்டி நிறைவடைந்துள்ளது. இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றது, அதில் 3 தங்கம், 2 வெள்ளி, மற்றும் 2 வெண்கலம் அடங்கும். இதில், 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் 3ம் இடம் பிடித்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்வானிகா வெண்கலம் வென்றுள்ளார். கேடட் பெண்கள் U-10 போட்டியில் வெற்றி பெற்று கேரளாவின் திவி பிஜேஷ் […]