இந்தியாவில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன-பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில், மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த தின விழாவை கொண்டாடும் வேளை இது.இந்தியாவில் 100 கோடிக்கு மேலானோர் வாக்களித்து இந்த அரசை தேர்வு செய்தனர்.
தூய்மை இந்தியா திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்கள் அரசு அமைத்துள்ளது.இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது . 5 ஆண்டுகளில் 370 மில்லியன் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் துவங்கியுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025