உலகை உலுக்கும் கொரோனா – உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எவ்வளவு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.59 கோடியாகவும், உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை 6.42 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 1,59,41,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6,42,751 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களின் 97,24,289 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 2,89,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் 6,199 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 55,72,588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025