இசைஞானியாக தனுஷ்!? இயக்குனராக யுவன் சங்கர் ராஜா!? ஆச்சர்யத்தில் தமிழ் சினிமா!

- இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க யுவன் சங்கர் ராஜா திட்டமிட்டுள்ளாராம்.
- அப்படத்தில் இளையராஜாவாக நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் இசைஞானியாக புகழின் உச்சியில் இருப்பவர் இளையராஜா. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை அமைத்துள்ளார். இந்த சாதனசா உலக சாதனையாக கருதப்படுகிறது. தற்காலத்து இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் இவரது பாடல்கள் அமைந்துள்ளது. இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் தனுஷை தன நடிக்க வைப்பேன் என யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே கூறியிருந்தார்.
தற்போது அதற்கான முயற்சியில் யுவன்-ஷங்கர்-ராஜா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளையராஜாவாக தனுஷ் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன. இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை யுவன் சங்கர் ராஜா இயக்க உள்ளாராம். அதில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் அடுத்தடுத்து அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.