முட்டை விலை 10 காசுகள் உயர்வு...!

Today the farm purchase price of an egg in the Namakkal region has risen by 10 paise to 4.00.

இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல் மண்டலத்தில் 10 காசுகள் உயர்ந்து 4.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று ஆம், 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் உற்பத்தி அதிகமானதால் முட்டையின் விலையை உயர்த்த முடிவு செய்தனர்.

அதன் படி, நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து 4.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 4.10 காசுக்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.