தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைவு..!

In Chennai today, 22 carat jewelery gold fell by Rs 384 to Rs 35,328 per ounce. Sales fell by Rs 48 per gram to Rs 4,416.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.48 குறைந்து ரூ.4,416-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை தினம் தினம் குறைந்து மற்றும் உயர்ந்துகொண்டு வருகிறது.

ஆனால், இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.48 குறைந்து ரூ.4,416-க்கு விற்பனை. அதைபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 90 காசு குறைந்து 74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.