தங்கத்தின் விலை சரிவு... சவரனுக்கு ரூ.680 குறைவு..!

In Chennai today, the price of 22 carat jewelery gold fell by Rs 680 to Rs 34,128 per razor. Sales fell by Rs 76 per gram to Rs 4,266

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.76 குறைந்து 4,266-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வருவதால் மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வருகிறார்கள். ஆனால் நேற்று தங்கம் விலை உயர்ந்தது. இன்று குறைந்துள்ளது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.76 குறைந்து 4,266-க்கு விற்பனை.

அதைபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 1.60 குறைந்து 72-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.