தங்கம் விலை சரிந்தது... சவரனுக்கு ரூ.136 குறைந்தது..!!

Gold prices fall by Rs 136 to Rs 34,080 per ounce and gold by Rs 4,260 per gram.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.34,080-க்கும், கிராமிற்கு தங்கம் ரூ.4,260-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

ஆம் இன்றயை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.136 குறைந்து ரூ.34,080-க்கும், கிராமிற்கு ரூ.17 குறைந்து 4,260-க்கு விற்பனை. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.69.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.