தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு.!

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34,992க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.736 குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்ததால் மக்கள் உற்சாகத்துடன் தங்கத்தை வாங்கினர். ஆனால் இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.34,992க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 10 உயர்ந்து ரூ.4,374-க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.