சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34,912க்கு விற்பனை.
பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. எனவே, தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து வந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
unknown nodeஅதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.34,912க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.4,364க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரண வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,100க்கும் விற்பனையாகிறது.