கொரோனா வைரஸ் பாதிப்பை மரம் வளர்ப்பதன் மூலம் குறைக்க முடியுமா.?

காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படும் போது, அவர்களுக்கு பாதிப்பு அதிகமாகி, இறப்பு விகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்படுகிறது என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா வைரஸின் பாதிப்பானது காற்று மாசுபாட்டுடன் நேரடி தொடர்பு உள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது.
சமீபத்தில், இஸ்ரேலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட அதிக இறப்பு விகிதத்திற்கும், காற்று மாசுபாட்டிற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
அதாவது, காற்று மாசுபாட்டினால், உடல்நிலை ஏற்கனவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டால், அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடையும் சூழல் உள்ளது. இதன் காரணமாக கூட அதிக இறப்பு விகிதம் அதிகமாக காணப்படும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும். இதனால், இறப்பு விகிதம் அதிகரிக்கும் சூழல் உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கும், சமூக விலகலும் எவ்வளவு முக்கியமோ, அதே போல, மரங்கள், தாவரங்கள் வளர்த்து காற்றை சுத்தப்படுத்துவதும், சுற்றுசூழலை சுத்தமாக வைத்திருப்பதும் கொரோனா தடுப்பு பணிகளில் இன்றியமையாதது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.