ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்துக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன் – விஜய் ஆண்டனி.!

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்துக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ஆனந்த கிருஷ்ணன் போன்ற பலர் கலந்து கொண்டார்கள்.
இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆண்டனி, ” தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்துக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025