, ,

சபரிமலை கோயிலில் தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நிறைவு.!

By

சபரிமலை கோயிலில் தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெற்று முடிந்தது, நேற்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு, 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாட்களாக நடைபெறும் இந்த மண்டலபூஜை, இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், சபரிமலை கோயிலில் தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு இன்று மண்டல பூஜை நிறைவு பெற்றது. அந்த வகையில், இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும், இன்று சாத்தப்பட்ட நடை மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படுகிறது.

Dinasuvadu Media @2023