மீண்டும் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா.! எந்த படத்தில் தெரியுமா.!

Default Image

கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இந்த திரைப்படம்குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.இது அவர்களது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமென்பதும் ,அதனை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்த நிலையில் கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.ஏற்கனவே நயன்தாரா வல்லவன்,இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது . இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்