22 பேர் உயிரைக் காப்பாற்றிய நடிகர் சோனு சூட்..!!

சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் 15 சிலிண்டர்களை பெங்களூர் மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார்.
கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க அரசு கேட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு பல தரப்பில் கேட்டனர், ஆனால் கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சத்யநாராயணன் என்பவர் , தனக்கு தெரிந்த நடிகர் சோனு சூட்டின் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். உடனடியாக சோனு சூட்டும் தனக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் தகவலை தெரிவித்து ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்து முதலில் ஒரு சிலிண்டர் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன் பின் சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் சில மணி நேரத்தில் மேலும் 15 சிலிண்டர்களை மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. சோனு சூட் செய்த இந்த உதவிக்காக பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025