நம்ம தப்பு பண்ணா கூட சூர்யா சார் சொல்லுவாரு- ஆர்யா ஓபன் டாக்.!

சூர்யா குறித்து நடிகர் ஆர்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில்கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பலர் ஆர்யாவை பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஆர்யாவுடன் நேர்காணலில் சூர்யா மற்றும் அஜித்துடன் நடித்துள்ளீர்கள் இருவரும் சார்பட்டா பரம்பரை டிரைலரை பார்த்து விட்டு பாராட்டினார்களா என்று கேட்டதற்கு ஆர்யா ” சூர்யா சார் கால் செய்து நன்றாக இருக்கிறது என பாராட்டினார். படத்தின் டிரைலரை அவர்தான் வெளியிட்டார். எனக்கு மிகவும் சந்தோசம் இதற்கு மிகவும் நன்றி. சூர்யா சார் பயங்கரமா உற்சாகப்படுத்துவார். நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று உன்மையாக சொல்வார். அதே சமயம் நம்ம தப்பு செய்தால் அதையும் சொல்வார்” என்று தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் நடிகர் ஆர்யா இணைந்து காப்பான் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025