தளபதி 65 ஓப்பனிங் சாங் தர லோக்கல்… வெளியான வெறித்தனமான தகவல்..!

தளபதி 65 படத்தின் ஓப்பனிங் பாடல் மிகவும் தர லோக்கலாக இருக்கும் என்றும் அதை அனிருத் பாடப்போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடித்து விட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த தளபதி 65 படத்தின் ஓப்பனிங் பாடல் மிகவும் தர லோக்கலாக இருக்கும் என்றும் அதை அனிருத் பாடப்போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025