இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைப்பெறுகிறது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
unknown nodeமுதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக சஜாய், நூர் அலி இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி இருவரும் வந்தனர்.பிறகு அதிரடியாக விளையாட அணியின் எண்ணிக்கை 10 ஓவரில் 60 ஆக உயர்ந்தது. பின்னர் 11 -வது ஓவரில் சஜாய் 34 ரன்னில் வெளியேற அடுத்த இரண்டு பந்தில் நூர் அலி 31 வெளியேறினார்.
unknown nodeபிறகு களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹீதி நிதானமாக விளையாடி வந்தார்.ரஹ்மத் 0 ரன்னில் வெளியேற அடுத்தடுத்தது வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
unknown nodeஇறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்துஅணி பந்து வீச்சில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டையும் , லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர்.173 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.