த.வெ.கவுக்கு காங்கிரஸ் ஆதரவு! இது முதுகில் குத்துவதை தவிர வேறு இல்லை - திமுக!

கூட்டணியிலிருந்து ராஜ்யசபா எம்.பி.யை வாங்குனீர்களே..இப்போது ராஜினாமா செய்துவிடுவீர்களா? என திமுகவின் சரவணன் பேசியுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தேசிய காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், திமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன், இதை “முதுகில் குத்திய செயல்” என்றும், “Back Stabbing” என்றும் விமர்சித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளின்படி 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, பெரும்பான்மைக்கு (118) தேவையான ஆதரவைத் தேடும் முயற்சியில் காங்கிரஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தேசியத் தலைமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் “மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்க” அறிவுறுத்தியிருந்தது. இன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், தவெகவுக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுக்கு திமுக தரப்பில் உடனடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் கூறியதாவது:“இது முதுகில் குத்துவதைத் தவிர வேறு இல்லை. Back Stabbing என்றுதான் சொல்ல வேண்டும். Returning Officer வெற்றிச் சான்றிதழில் கையெழுத்து போட்ட ஈரம் காய்வதற்குள் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறது.

பாஜகவை உள்ளே விடக்கூடாது என்கிறார்கள். ஆனால் பாஜக ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இது அவர்களுடைய ego-வை திருப்திப்படுத்தும் முயற்சி மட்டுமே.” மேலும், “விஜய் முதலில் மோடிக்கு நன்றி தெரிவித்தார். தன் கட்சி நிர்வாகிகளுக்கோ, தனக்கு வாக்களித்த மக்களுக்கோ அல்ல” என்றும் சரவணன் சுட்டிக்காட்டினார்.

என்ன சொல்லி ராகுல் காந்தியை இதுக்கு நம்ப வச்சாங்கன்னு நமக்குத் தெரியல. அவர்கள் எதை பார்க்க மறுக்கிறார்கள்? ஏன் எது இந்த ego அவர்களுடைய கண்ணை மறைக்கிறது? என்ன அப்படின்னா இது காங்கிரஸிற்கு இந்தியா முழுக்க எப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அப்படின்றதை பத்தி அவர்கள் சிந்திச்சும் சிந்திக்கவில்லை அப்படின்றது தெளிவாக பார்க்க முடிகிறது. ஐயா, அவங்களுக்கு தேவை. த.வெ.க வந்து நூத்தி எட்டு சீட்ல இருக்கு. இவரு போயிடுவாரு. சபாநாயகர் போயிடுவாரு. நூத்தி ஏழு. திரு. விஜய் அவர்கள் ராஜினாமா பண்ணனும்.

மேலும் அவர் பேசுகையில் ரெண்டு கடை இதுல இருக்காரு. நூத்தி ஆறு. நூத்தி ஆறு அவங்க strength. பன்னெண்டு MPக்களுக்கு மேல அவங்களுக்கு தேவை. அஞ்சு MPக்களை காங்கிரஸ் வைத்துக்கொண்டு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம். நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம். நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்னா அந்த ஐந்து MPக்கள் ஆதரவை வைத்து என்ன என்ன செய்ய முடியும்? அதே போல முக்கியமான விஷயம் அதிமுக வந்து ஆதரவு கொடுக்கிறோம் அப்படின்னு சொல்லிச் சொல்றாங்க.

நாற்பத்தி ஏழு பெருசா அஞ்சு பெருசா? அஞ்சுக்கும் நாற்பத்தி ஏழுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? அதிமுக ஆதரவு கொடுக்கிறன்றாங்க. இவர்கள் இல்லை. நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம். நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம் அப்படின்றாங்க. யாருடைய ஆதரவை? இப்போ நீங்க விஜய் நிலைமைல இருந்தீங்கனா நீங்க யாருடைய ஆதரவை நாடுவீங்க அப்படின்றது முக்கியமான கேள்வி.

இதற்கெல்லாம் வந்து விடை இல்ல. பாஜக, RSSக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கிறோம்ன்றாங்க. ஐயா, பாஜக, RSSக்கு எதிராக விஜயே குரல் கொடுக்கவில்லை. கடந்த ஆறு மாத காலத்துல ஏதாவது ஒரு issueவுல பாஜகவுக்கு எதிராக திரு. விஜய் அவர்கள் பேசி இருக்கிறாரா? மோடிக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறாரா? அப்படின்னா கிடையாது.

என்ன பண்ணி இருக்காரு? First ஜெயிச்ச உடனே பெரிய வெற்றி அப்படின்னாங்க. கரெக்ட். வாழ்த்துக்கள். வாழ்த்துகிறோம். முதல்வராக அவர் நல்லது செய்ய வேண்டும். என்ன பண்றாரு? ஜெயிச்ச உடனே ஓட்டு போட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறாரா? அவரைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறாரா? அவரைத் தேர்ந்தெடுத்த அந்தக் constituency மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறாரா? அவருக்காக உழைத்த அவருடைய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கிறாரா?

அவருடைய fansக்கு நன்றி தெரிவிக்கிறாரா? இல்ல. யாருக்கு நன்றி தெரிவிச்சாரு First? மோடி. மோடி அவர்களுக்கு முதல் நன்றி. தேர்தல் முடிந்தவுடன் அதுவும் ஒரு நாற்பத்தி எட்டு மணி நேரம் கழித்து அத்தகைய ஒரு tweet வந்து போடுறாரு. இப்படியொரு சூழல்ல, இப்படியொரு சூழல்ல நாங்கள் பாஜக, RSSஐ உள்ளே விடமாட்டோம். அதற்காக அப்படின்னா எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை " எனவும் தெரிவித்தார்.

த.வெ.கவுக்கு காங்கிரஸ் ஆதரவு! இது முதுகில் குத்துவதை தவிர வேறு இல்லை - திமுக!