உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
unknown nodeஇந்நிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி உடன் மோதியது.அப்போட்டியில் அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.அதனால் அவருக்கு பதிலாக அப்போட்டியில் ஜடேஜா களமிறங்கினர். அப்போது தவான் மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்தது.
unknown nodeஇந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட இவர் மைதானத்தில் இருந்தால் நிச்சயம் அடுத்த போட்டியில் தவான் கண்டிப்பாக கலந்து கொள்வர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது பிசிசிஐ தவானை உலகக்கோப்பையில் இருந்து நீக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் தவானுக்கு காயம் சரியாக ஆகாத நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.உலகக்கோப்பையில் இருந்து தவான் விலகியதை தொடர்ந்து பல வீரர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.
unknown node