#ENGvBAN : இங்கிலாந்து அணி அபார வெற்றி !ஷாகிப்பின் சதம் வீண்

இன்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டியானது

இன்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டியானது  கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.இங்கிலாந்து அணி  50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முகம்மது சைஃபுடின்,மெஹீடி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 153 ரன்கள், ஜானி பைர்ஸ்டோவ் 51 ரன்கள் அடித்தனர்.இதன் பின் 387 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.

unknown node

பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்கள் சரியான தொடக்கத்தை தரவில்லை.இக்பால் 19 ரன்கள்,சர்கார் 2 ரன்களில் வெளியேறினார்கள்.இதன் பின்னர் ஷாகிப் மற்றும் முஸ்பிகூர் ஜோடி சேர்ந்தனர்.இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.ஆனால்  முஸ்பிகூர் 44 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.பொறுப்புடன் விளையாடிய ஷாகிப் சதம் அடித்தார்.பின் 121 ரன்னில் ஷாகிப்  வெளியேறினார்.இதன் பின் வந்தவர்கள் சிறப்பாக ஆடத் தவறினார்கள்.இறுதியாக பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ்,ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஷாகிப் 121 ரன்கள் அடித்தார்.இதன் மூலம் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

#ENGvBAN : இங்கிலாந்து அணி அபார வெற்றி !ஷாகிப்பின் சதம் வீண்