சுவையான தஹி பூரி செய்வது எப்படி ?

நமது குடும்பங்களில் அனுதினமும் விதவிதமான உணவுகளை செய்யும் போது, அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில், தஹி பூரி சுவையான ஒரு உணவு என்றே சொல்லலாம்.

சுவையான தஹி பூரி செய்வது எப்படி ?

நமது குடும்பங்களில் அனுதினமும் விதவிதமான உணவுகளை செய்யும் போது, அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில், தஹி பூரி சுவையான ஒரு உணவு என்றே சொல்லலாம்.

தேவையானவை

குட்டி பூரிகள் – 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்)

தயிர் – ஒரு கப்,

உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி – தேவையான அளவு,

உருளைக்கிழங்கு – 2,

காய்ந்த பட்டாணி – கால் கப்,

ஸ்வீட் சட்னி – 10 டீஸ்பூன்,

ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – தேவையான அளவு.

செய்முறை

unknown node

பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்க வேண்டும். குட்டி பூரிகளை வரிசையாக தட்டில் அடுக்க வேண்டும். தயிருடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி சேர்த்துக் கலக்க வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்க்க வேண்டும்.

பூரியின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு தயிர் கலவை, சிறிதளவு உருளைக்கிழங்கு, பட்டாணி, ஸ்வீட் சட்னி விட்டு பூரியை நிரப்பி, மேலே ஓமப்பொடியை தூவி பரிமாறவும். இப்பொது சுவையான தஹி பூரி தயார்.