இந்தியா Vs நியூசிலாந்து போட்டி மழை காரணமாக ரத்து !

இன்றைய போட்டியில் இந்தியா  Vs நியூசிலாந்து அணிகள் மோத இருந்தது.இந்த போட்டியானது  நாட்டிங்காம்மில்  உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில்

இன்றைய போட்டியில் இந்தியா  Vs நியூசிலாந்து அணிகள் மோத இருந்தது.இந்த போட்டியானது  நாட்டிங்காம்மில்  உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் மைதானத்தில் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஆனது.பின்னர் மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.போட்டி ரத்து செய்யப்பட்டதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.மேலும் மழை காரணமாக நடப்பு உலகக்கோப்பையில் நான்காவது முறையாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.