நிரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு

this news gives information about London court orders to arrest Nirv Modi-nirv modiyai kaithu seiya london nithemandram uthirav

முன் லண்டனின் மேற்கு முனை பகுதியில் உள்ள சுமார் ரூ.75 கோடி மதிப்பிலான பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும்.

இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை பிறப்பித்து உள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் , நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. , அமலாக்கப்பிரிவு , வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர்.

நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.

சில நாட்களுக்கு முன் லண்டனின் மேற்கு முனை பகுதியில் உள்ள சுமார் ரூ.75 கோடி மதிப்பிலான பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும். அதன் வாடகையே மாதத்துக்கு சுமார் ரூ.15 லட்சம் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை பிறப்பித்து உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.