உலகக்கோப்பையில் 22-வது லீக் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் சேர்த்தனர். மழைகாரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
unknown nodeஇந்நிலையில் 46.4 ஓவரில் இந்திய அணி விளையாடும் போது 4 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் எடுத்தபோது மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தினர். பின்னர் மைதானத்தை சரி செய்து விட்டு மீண்டும் போட்டி தொடங்கினர். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக சர்ப்ராஸ் அகமது போட்டி தொடங்கிய சில நேரத்தில் கொட்டாவி விட்டார்.
unknown nodeமைதானத்தில் இருந்த கேமராக்களில் பதிவாகியது. மேலும் அவர் செய்த இந்தக் காரியம் சமூக வலைதளங்களில் பரவி சர்ப்ராஸ் அகமதை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் கடுப்பாகினர்.
unknown nodeunknown node