சதம் அடித்ததன் மூலம் பல சாதனை படைத்த ரோஹித் சர்மா!

நேற்றைய போட்டியில் இந்திய , பாகிஸ்தான் அணி மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடை பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற

நேற்றைய போட்டியில் இந்திய , பாகிஸ்தான் அணி மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடை பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது. மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 இலக்காக வைத்தனர்.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 140 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பல சாதனைகளை படைத்தார்.

ஒருநாள் போட்டியில் அடித்த 24 சதம்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அடித்த 2 -வது சதம்

உலகக்கோப்பையில் அடித்த 3 வது சதம்

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அடித்த 2 -வது சதம்