ஒருநாள் போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்களில் சச்சின் முதலிடம்!

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் மோதியது .முதலில் களமிறங்கிய

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் மோதியது .முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப் பட்டது.இப்போட்டியில் விராட் கோலி 82 பந்தில் 72 ரன்கள்  குவித்தார்.அதில்  8 பவுண்டரி அடக்கும்.இந்நிலையில் இந்த  ஆட்டநாயகன் விருது மூலம் இதுவரை கோலி  ஒருநாள் போட்டிகளில் 33-வது முறையாக ஆட்டநாயகன் விருது வாங்கி உள்ளார்.மேலும் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்  சச்சின் முதலிடத்தில் உள்ளார்.சச்சின்  விளையாடிய ஒருநாள் போட்டியில்  62 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி முதலிடத்தில் உள்ளார்.சச்சின் – 62ஜெயசூர்யா – 48கோலி  – 33 *காலிஸ் / பாண்டிங் / அஃப்ரிடி – 32