கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் – கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்!

கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அவர்கள் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், குறிப்பிட்ட மதத்தை இலக்காகக் கொண்டு கர்நாடக அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதாகவும், இதை நாங்கள் எதிர்க்கிறோம். கட்டாய மதமாற்றத்திற்கு நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும், சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் வெள்ள பாதிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான நிவாரணம், 40 சதவீத கமிஷன் புகார்  உள்ளிட்ட அரசின் தோல்விகள் குறித்து நாங்கள் பிரச்சனையை கிளப்பும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கர்நாடகாவில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு  சில மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உணவுப்பழக்கம் அவரவரின் தனிப்பட்ட விஷயம். முட்டை சாப்பிடாதவர்களுக்கு முட்டை வழங்க வேண்டாம். சாப்பிடுபவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் – கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்!