21 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

TN RAIN

சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.

அதன்படி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், கிண்டி, விருகம்பாக்கம், மாம்பலம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல், காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.

மேலும், தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம் :

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)