சென்னை :வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் நகர்ந்து வருவதாகவும், சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இன்று மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களில் எங்கெல்லாம் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது பின்வருமாறு….
ரெட் அலர்ட்
அதன்படி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
மேலும், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்
அத்துடன், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
