Live : உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் முதல்.., சர்வதேச செய்திகள் வரை…
உள்ளூர் அரசியல் நகர்வுகள் முதல் சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த மாநில கட்சிகள் காணாமல் போயுள்ளன. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச விண்வெளி மைய ஒத்துழைப்புடன் வரும் மே மாதம் தொடங்க உள்ள விண்வெளி பயணத்தில், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) மூலம் விண்வெளிக்குச் செல்கிறார்.இந்த நிகழ்வை இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு பெருமைமிக்க மைல்கல் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜித்தேந்திர சிங் பாராட்டியுள்ளார்.