CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி.

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து, சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவரில் 179 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதலில் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும், சுனில் நரைன் 26 ரன்களிலும், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இப்படி, தொடக்கத்தில் விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறினாலும், கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 48 ரன்கள் எடுத்தார். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். மேலும், மணீஷ் பாண்டே மிரட்டலாக விளையாடினர். சிஎஸ்கே அணியில் அசத்தலாக பந்து வீசிய நூர் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 16 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இப்பொது, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்க போகிறது. சிஎஸ்கே தரப்பில், நூர் அகமது 4 விக்கெட்டுகளையும், அன்ஷுல் காம்போஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.