காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!
ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பயங்காவாதிகள், எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுத்தி நிறுத்தி அழித்து வருகின்றனர். அதேபோல எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகள் மீதும் இந்திய ராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இன்று, ஜம்மு-காஷ்மீரின் சம்பா எல்லை பக்தியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். இந்த ஊடுருவலை எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) தடுத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் கூறிய தாக்குதலில், மே 8 மற்றும் 9ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில், ஒரு பெரிய பயங்கரவாதக் குழு ஊடுருவ முயற்சி மேற்கொண்டது. இந்த முயற்சி கண்காணிப்பு கட்டத்தால் கண்டறியப்பட்டது. இந்த ஊடுருவல் முயற்சிக்கு பாகிஸ்தான் ரேஞ்சர்கள் குழுவின் ஆதரவுடன் செயல்பட்டது. BSFஇன் வீரர்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து, குறைந்தது 7 பயங்கரவாதிகளை கொன்றனர் என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025