10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தி மொழி குறித்து இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், குறுவினா பகுதியில், ‘இந்தியை கற்க விரும்பும் காரணத்தை குறிப்பிடுக’ என கேட்கப்பட்டிருந்ததாக இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை மாணவர்களிடையே இந்தியை திணிப்பதாக, கண்டன குரல்கள் எழுந்தது. இதனையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை, 10-ம் வகுப்பு பாடப்பகுதியில், தமிழ் மற்றும் […]
என்னையும், எனது குழந்தைகளையும் எனது கணவரிடம் வழியனுப்பி வையுங்கள். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(39). இவரது மனைவி ராசி. இவர்களுக்கு அக்சயா, அனியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பதாக ரஞ்சித்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, ரஞ்சித்குமாரின் பெற்றோருடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். ரஞ்சித்குமாரின் தந்தை ராமதாஸ் (72) கூலிவேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில […]
கூடைபந்தாடிய முன்னாள் அதிபர் ஒபாமா. அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜோ பைடனுக்கு ஆதரவாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு சென்ற அவர், எந்தவொரு சலனமும் இல்லாமல், மிகவும் எளிதாக பந்தை கூடைக்குள் போடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது வெறும் 20 நொடிகள் மட்டுமே ஓடுகிறது. அந்த வீடியோவில், ஒபாமா அவர்கள் ‘இப்படித்தான் நான் செய்வேன்’ என கூறிவிட்டு […]
வகுப்புவாத, சாதி மற்றும் முதலாளித்துவ சித்தாந்தங்களை எதிர்த்து போராடுவேன். நாளை பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்ட, செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரை தோற்கடிக்க எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. […]
பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. தீபாவளி காலங்களில், ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் பொதுத்துறை ஊழியர்களுக்கான போனஸ் குறித்து, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தீபாவளியை ஒட்டி, 2.50 லட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் கலந்து கொள்ளுவோரை ஆபரணங்களை கழற்ற சொல்லுவது ஏன்? கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட, மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது. பர்ஸ் மற்றும் கை கடிகாரம் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளால் பல்வேறு மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த்ராஜ் என்பவர், […]
பல கட்டுப்பாடுகளுடன் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில், 8 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளிலும் குறைந்த அளவு […]
பாலியல் தொந்தரவு கொடுத்த உத்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியை செருப்பால் அடித்த பெண்கள். உத்திரபிரதேசத்தில், ஜலான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியாக இருப்பவர் அனுஜ் மிஸ்ரா. இவரை இரண்டு பெண்கள் செருப்பால் அடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வெளியானது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், அனுஜ் மிஸ்ராவை தாக்கியது மாயா மற்றும் வர்ஷா என்ற இரு பெண்கள் என்பது தெரியவந்தது. […]
துருக்கி நிலநடுக்கத்தில் 33 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 70 வயது முதியவர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துடன், சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இஸ்மியர் நகரமே உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால், 400-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிற நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை […]
ஒடிசா மாநில ஆளுநர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரசை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் 82 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசானது, […]
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு. துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில், 7.0 என பதிவாகியுள்ளது. அங்கும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் எல்லாம் சரிந்து விழுந்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமானது மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போது இந்த இடிபாடுகளில் […]
ஜம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு. இன்று காலை ஜம்மு – காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடமேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே நாட்டின் வடபகுதியில் உள்ள அருணாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிற நிலையில், […]
கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக செயலாற்றி வருபவர் அதானம் கெப்ரியேஸஸ். இவருடன் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், அதானம் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. நான் நலமுடன் உள்ளேன். அறிகுறிகள் ஏதும் இல்லை. ஆனாலும், உலக சுகாதர […]
எனது கணவர் தனக்கு வழுக்கை இருப்பதை மறைத்துவிட்டதாக நீதிமன்றத்தை நாடிய பெண். மும்பையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், நாய நகர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த மாதம் எனக்கும், எனது கணவருக்கும் திருமணம் நடைபெற்றது. எனது கணவர் அவருக்கு வழுக்கை இருப்பதை மறைத்து, விக் வைத்து ஏமாற்றி விட்டார். அவருக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்கு பிறகு தான், எனக்கும், எனது குடும்பத்திற்கும் தெரியவந்தது. மேலும் இயற்கைக்கு மாறான உடலுறவு […]
கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்த சிறுவன். நியூயார்க்கில் உள்ள மளிகைக்கடை ஒன்றில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வேடிக்கையான ஒரு விளையாட்டில் ஈடுபட்டார். அந்த விளையாட்டு என்னவென்றால், அந்த சிறுவனிடம் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் அளித்தால், அச்சிறுவனுக்கு கொடுக்கப்படும் ஐந்து வினாடிகளில், அவனுக்கு தேவையான பொருட்களை அந்த மளிகை கடையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இதனையடுத்து, அந்த சிறுவனிடம் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் சரியான பதில் அளித்துள்ளார். […]
வால்பாறையில் சிங்கவால் குரங்குகளுடன் இணைந்து செல்பி எடுக்க தடை. உலக அளவில் மிக குறைந்த அளவே வாழும் சிங்க வால் குரங்கானது, வால்பாறை பகுதியில் அதிக அளவில் வாழ்கிறது. இந்த குரங்கானது சிங்கமுக தோற்றத்துடன் காணப்படுவதால், இதற்கு சிங்கவால் குரங்கு என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாத்தலமான வால்ப்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த சிங்கவால் குரங்குகளுடன் இணைத்து புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர். இதனை தடுப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த குரங்குகளுக்கு […]
பெங்களூரை சேர்ந்த தேவாஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க கோரி, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு, இஸ்ரோவின் முன்னாள் அதிகாரிகள் சிலரும் மற்றும் அமெரிக்க தொழிலதிபர்கள் சிலரும் சேர்ந்து ஆரம்பித்தது தான் இந்த தேவாஸ் புத்தாக்க நிறுவனம். மொபைல் போன் நிறுவனங்களுக்கு மல்டிமீடியா சேவையை வழங்குவது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும். இதற்காக தேவாஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இரண்டு செயற்கை கோள்களை குத்தகைக்கு […]
தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமலஹாசன் நவ.7-ம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம. தலைமை அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில், கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்காக கட்சியினரை தயார்படுத்தும் விதமாக, தொடர் ஆலோசனை கூட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நடத்தி வருகின்றனர். மேலும், நவம்பர் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற உள்ள […]
சீனாவில் மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸானது முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் உருவானது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸானது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவில் ஈக்வடார் கடல் உணவு தயாரிப்பு நிறுவனமான, பயர்ஸ்பா நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சீன சுங்க அதிகாரிகள், அந்த நிறுவனத்திலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய, ஒரு வாரத்திற்கு தடை விதித்துள்ளனர். மேலும், […]
மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் பெண்களை இழிவாக பேசியதாக, அவருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திருமாவளவனுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டங்களும் நடத்தினர். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு. மனுதர்மத்தில் சில நல்ல […]