ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பத்தினர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூவரும் தங்கள் வீட்டிற்குள் மயக்க நிலையில் காணப்பட்ட பின்னர், அவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இருப்பினும், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, அறை ஹீட்டரிலிருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு […]
தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலாவது இடத்திலும், ஸ்வப்னா சுரேஷ் பெயர் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. தங்கக்கடத்தல் விவகாரத்தில், பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் […]
கொரோனாவுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் மற்றும் பிரச்சனைகள் எழுந்த போதிலும், உத்திர பிரதேச மாநிலத்தில் பொருளாதார இழப்பீடுகளை எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 2522.5 கோடி அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் சுரேஷ் கன்னா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2019 டிசம்பரில் 10,008.2 கோடி வருவாய் வந்ததாகவும், இந்த ஆண்டு 2020 […]
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முயற்சியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்களும் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில் தமிழ் மொழி கலாச்சாரத்தை பரப்பும் வகையில் தமிழ் அகடமி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடமிக்கான தனி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் […]
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் […]
மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சமி ரத்தன் சுக்லா அவர்கள் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பலமிழக்கச் செய்யும் வகையில் வலைவீசி தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல அமைச்சர்கள் […]
டெல்லியில் சாந்தினி சவுக் பகுதி தற்போது அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. டெல்லியில் சாந்தினி சவுக் பகுதி தற்போது அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தை எதிர்த்து […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஜனவரி 29-ஆம் தேதி தொடங்குகிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 30 வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் பறவைக் காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களின் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் […]
நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி உள்ளன. ஆகவே ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் நாடு முழுவதும் […]
கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளதாக சீரம், பாரத் பயோடெக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளோம் என சீரம், பாரத் பயோடெக் நிறுவனம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. மக்களின் உயிர் காப்பது ஒன்றே தங்கள் முழுமுதல் நோக்கம் என்று சீரம், பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி ஏற்றுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தின் தரம் தொடர்பாக சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் இடையே முரண்பட்ட கருத்துக்கள் வெளியான நிலையில், தற்போது இரு நிறுவனமும் […]
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது .மேலும் நோய் கண்டறியப்பட்ட கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரு மாவட்டங்களின் சில பகுதிகளில் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் நோயால் இறந்த பின்னர் […]
முதல்வர் பழனிசாமியின் நன்றி தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்தற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த […]
பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ பயன்படுத்தஅவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பீகார் பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும், பாலிவுட் நடிகை நேஹா ஷர்மாவின் தந்தையுமான அஜித் சர்மா கூறுகையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுவான மக்களிடையே பல்வேறு வகையான சந்தேகங்கள் இருப்பதாக கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, முதலில் பிரதமர் […]
கொச்சி- மங்களூரு இடையே 450 கி.மீ தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை காணொளி மூலம் பிரதமர் தொடங்கிவைத்தார். கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 450 கி.மீ தூரமுள்ள இந்த குழாயை கெயில் (இந்தியா) லிமிடெட் உருவாக்கியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை இத்திட்டம் இணைக்கிறது. கொச்சியில் உள்ள திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) மறுசீரமைப்பு முனையத்திலிருந்து, மங்களூரு வரை குழாய் வழியே […]
கோவிஷீல்ட் , கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் அரசாங்கம் ஒப்புதல் கையெழுத்து அளித்து விட்டால் அடுத்த வாரமே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலமாக மக்கள் பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் நாளுக்கு நாள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல நாடுகளிலுள்ள ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சில வெற்றியடைந்துள்ளது. இந்தியாவில் […]
நாடு முழுவதும் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்வு உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.எனவே இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு புதிய உருமாறிய தொற்று உறுதியானால் மத்திய அரசே முதலில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது.அந்த வகையில் இன்று […]
அஸ்ஸாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு வகையான முன்முயற்சியாக, பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் வகுப்புகளில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு ரூ .100 வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் மாணவர்களுக்கு பிரக்யன் பாரதி யோஜனாவின் கீழ் இருசக்கர வாகனங்களை மாநில அரசு வழக்கும் என சர்மா கூறினார். இதற்காக மாநில அரசு ரூ.144.30 கோடியை செலவிடும் என தெரிவித்தார். இந்த எண்ணிக்கை […]
புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் இரண்டு நீதிபதிகள் கட்டடப் பணிக்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர். புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி வழங்கியது […]
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் (ஆன்லைன்) வாக்களிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறைக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் […]