பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய வகையான கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது.ஸ்பெயின், ஜப்பான், ஆகிய நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உருமாறிய கொரோனா, இந்தியாவிலும் பரவதொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு , உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. அந்தவகையில் இன்று இதுவரை 73 பேருக்கு […]
தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட மூத்த தலைவர்கள் நியமித்தது காங்கிரஸ். அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஒருசில மாதங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அதற்காக அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட மூத்த தலைவர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அசாம் மாநிலத்திற்கு பூபேஷ் […]
பஞ்சாபில் ஜனவரி 7 முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 5 முதல் 12 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று பஞ்சாப் கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்துள்ளார். பள்ளிகளின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இருக்கும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் தொடர்ச்சியான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்படுவதால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு […]
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று தனது இல்லத்தில் மூத்த அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, கோழி வணிகம் மற்றும் பிற பறவைகளின் வர்த்தகத்தை தென்னிந்தியாவின் சில மாநிலங்களுடன் குறுகிய காலத்திற்கு நிறுத்த முடிவு செய்தார் என கூறப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள எந்த கோழி பண்ணையிலும் பறவைக் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்று அரசு நிலத்தில் வைக்கப்பட்டிருந்ததாக அம்பேத்காரின் சிலை அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹி எனும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் அனுமதியின்றி அம்பேத்காரின் சிலையை நிறியதற்காக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலையும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கூடி தான் 4 பாடியுள்ள இந்த அம்பேத்காரின் சிலையை நிறுவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலை நிறுவப்பட்ட அன்றே அவ்விடத்தில் காவலுக்கு நின்ற […]
கொரோனா தடுப்பு ஊசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசர தேவைக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தடுப்பூசிகளைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவியது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்றும், அப்படி […]
சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் படான் என்ற இடத்தில் 50 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரேதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உகைதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற 50 வயது பெண், பூசாரி உள்ளிட்ட இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதி அங்கன்வாடி தொழிலாளியாக அந்த பெண் பணிபுரிந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், ஒரு கும்பல் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் பெண்ணுறுப்பு […]
பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவை மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பி.எம்.சி வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் ரூ.95 கோடி கடன் பெற்றதாக பிரவீன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இந்த வழக்கின் விசாரணையில் , பிரவீன் ராவத் தனது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலுத்தியதும் […]
முன்னாள் ஹாக்கி வீரர் பிரவீன் ராவின் வீட்டிற்குள் நுழைந்த கடத்தல்காரர்கள் அவரின் குடும்பத்தினரை மிரட்டி காரில் பிரவீன் ராவ், சுனில் ராவ் மற்றும் நவீன் ராவ் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் கார்களைக் கண்டுபிடித்தனர். கடத்தல்காரர்கள் கடத்திய மூன்று பேரையும் நர்சிங்கி அருகே விட்டுச் சென்றனர். பின்னர், அவர்கள் மூன்று கார்களில் மொய்னாபாத் நோக்கி தப்பிச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட கடத்தல்காரர்கள் விசாரணையின் போது அகிலா பிரியா மற்றும் அவரது […]
பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய வகையான கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவதொடங்கிய நிலையில், அதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் ஸ்பெயின், ஜப்பான், ஆகிய நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உருமாறிய கொரோனா, இந்தியாவிலும் பரவதொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. […]
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் […]
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியரை வீடு தேடி சென்று நலம் விசாரித்துள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா. 83 வயதான இவர் டாடா குழுமம் நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்த பிறகு தற்போது அறக்கட்டளை பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக மும்பையில் இருந்து புனே சென்ற ரத்தன் டாடா, வீட்டில் […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 11 )நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் எம்எல் ஷர்மா உள்ளிட்டோரின் வழக்கு மீதான விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தலைமை நீதிபதி கவலை தெரிவித்தனர். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகியது என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை […]
மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக இஸ்ரோ தலைமையகத்தில் வைத்து தான் விஷம் உட்கொண்டதாக இஸ்ரோவின் உயர்மட்ட விஞ்ஞானி தபான் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரோவில் தற்பொழுது மூத்த ஆலோசகராக பணியாற்றி வரக்கூடிய திரு. தபான் மிஸ்ரா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின் போது தான் ஆபத்தான ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷத்தை தோசை மற்றும் சட்டினியுடன் உட்கொண்டதாக கூறியுள்ளார். அப்பொழுது அவர் அகமதாபாத்தை […]
உத்திரபிரதேச மாநிலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் புதியதாக 100 பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய பேரிடர் மேலாண்மையில் மீட்பு பணிக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் எஸ் என் பிரதான் அவர்கள் பெண்கள் முழுமையான மீட்பு பணியாளராக பயிற்றுவிக்கபடுவார்கள் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்தரப்பிரதேச அரசு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரை அழைத்தபோது பெண்கள்தான் அங்கு சென்று மீட்பு […]
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூரை சேர்ந்தவர் பன்வாசி லால். இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். பன்வாசி லால் மனநிலை சரியில்லாதவர் ஆவார். இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவர் 2020 நவம்பர் 17 அன்று அட்டாரி எல்லை வழியாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனநிலை காரணமாக அவர் வீட்டிற்கு செல்லும் வழி தெரியாது. அவரை மீண்டும் அழைத்து வர அவரது குடும்பத்தினர் அமிர்தசரஸ் சென்றனர். ஜனவரி […]
உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்த, 105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு வங்க உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் இட மேம்பாட்டு திட்டம் ஆகியவை ஹூக்ளி ஆற்றில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், கொல்கத்தா செல்வதற்கான வசதியை மேம்படுத்த இடவசதியைத் திட்டமிடவும், கொல்கத்தா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மாநில […]
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தில், இந்துத்துவா குழுவின் நான்கு உறுப்பினர்கள் காவி கொடியசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தாஜ்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர திரிபாதி கூறுகையில், வலதுசாரி தலைவர் குவாரா தாகூர் தலைமையில் தாஜ்மஹால் வளாகத்தில் 3 பேர் காவி கொடிகளை அசைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்து ஜாக்ரன் மன்ச் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். தாகூர் அவர்கள் இளைஞர் பிரிவின் மாவட்ட தலைவராக உள்ளார் என தெரிவித்துள்ளார். […]