தேசிய அளவியல் மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கவுரையாற்றுகிறார். தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர்,தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 2.8 நானோ நொடிகள் என்னும் துல்லியத்துடன் இந்திய நிலையான நேரத்தை தேசிய அணு கால அளவு வழங்கும். சர்வதேச தரத்துக்கு இணையான தர உத்தரவாதத்தை வழங்குவதற்கான ஆய்வகங்களின் பரிசோதனை […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசுடன் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 39 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட […]
கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கும் இந்தியாவின் முடிவை உலக சுகாதார அமைப்பு (WHO) வரவேற்றுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆகவே அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு […]
கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கச் செய்யுமாறு வலியுறுத்தினார். இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் மற்றும் நாட்டில் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக பாரத் பயோடெக்கின் உள்நாட்டு கோவாசின் ஆகியவற்றை உருவாக்கியது, இது ஒரு பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு வழி வகுத்தது. மாயாவதி தனது டிவீட்டர் பக்கத்தில், கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி வரவேற்கத்தக்கது மற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். […]
அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அயராத முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு பிரதமர் மோடி உட்பட அனைவரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் பதிவிட்டுள்ள […]
அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,ஒரு தீர்க்கமான திருப்புமுனை. தடுப்பூசிகளுக்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.கடின […]
கோவிஷீல்டு, கோவாக்சன் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆகவே அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா […]
இங்கிலாந்தில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸை இந்தியா வெற்றிகரமாக கையாண்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.இந்தியாவும் விமான சேவையை நிறுத்தி உள்ளது.பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த உத்தரகாண்ட் முதல்வர் தேவேந்திர சிங் குணமாகி வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடிய அரசியல்வாதிகள் பெரிய தலைவர்கள், நடிகர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் தேவேந்திர சிங் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கென்று […]
பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை நாங்கள் எப்படி நம்புவது எனவும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் எனவும் உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு தற்பொழுதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல இடங்களில் கண்டறியப்பட்டு வந்த […]
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் மேற்கு வங்கம், அசாம் மற்றும் குஜராத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் கடந்த மாதம் 13-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து நட்டா கொரோனாவில் இருந்து குணமடைந்த பின், அந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு குணமடைய […]
மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது. மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது. இதற்காக சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் திருத்த சட்டம் 2020 அரசாங்கம் வரைவு மசோதா தயார் செய்துள்ளது. இது விரைவில் சட்டம் ஆகும் என கூறப்படுகிறது. இந்த மசோதா சிகரெட் மற்றும் […]
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், சுமார் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு ஒரு […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என அறிவிப்பு. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்படும் என்று கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று டிக்கெட் பெறுபவர்கள் வரும் 4-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருமலையில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலவச […]
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து […]
கர்நாடகாவில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று […]
மும்பையில் ரயில் பாதையில் சிக்கிக்கொண்ட ஒரு வயதான நபரை காப்பாற்றிய காவல் துறை கான்ஸ்டபிள் ஹீரோ என பலராலும் சமூகவலைதளத்தில் புகழப்படுகிறார். போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்லாமல், காவலர்களும் பலர் தங்களது உயிரையும் மாய்த்து பிறரை காப்பாற்றி வருகின்றனர். அது போல தற்போது மும்பையில் உள்ள காவல்துறையினர் ஒருவர் தஹிசார் மும்பை ரயில் நிலையத்தில் 60 வயது கொண்ட நபர் ஒருவர் ரயில் செல்லும் பாதையில் தனது செருப்பு விழுந்து விட்டதை அடுத்து, தனது காலனியை எடுக்கச் சென்றுள்ளார். […]
ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல். இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக நேற்று தகவல் கூறப்பட்டது. கொரோனா அவசர கால பயன்பாட்டிற்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை செய்ததாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து […]
இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருவதால், இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் விமான சேவைகளை நிறுத்தியது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, […]