தாங்கள் எந்த விவசாய நிலத்தையும் வாங்க மாட்டோம் எனவும், ஒப்பந்த விவசாயத்தில் நுழைவதற்கான திட்டம் முற்றிலும் இல்லை எனவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் போராட்டங்களால் செல்போன் கோபுரங்களும் தாககப்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான1500 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பஞ்சாப்பில் விவசாயிகளால் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா […]
கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 க்கு விற்கப்படும் என்று எஸ்ஐஐ தலைவர் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு மற்றும் பூனே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 க்கு விற்கப்படும் என்றும் தனியாரில் வாங்குபவர்களுக்கு, ஒரு டோஸுக்கு ரூ.1,000 விலைக்கு விற்கப்படும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். […]
வரப்போகின்ற மேற்குவங்க தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் போட்டியிடப்போவதாக முஸ்லிம் தலைவர்களின் சந்திப்புக்கு பின்பதாக கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் வருகிற ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்நிலையில் இந்த முறையாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என பாஜக திட்டமிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் […]
ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்யாகிரக போராளி தான். அவர்கள் தங்களின் உரிமைகளை திரும்ப பெறுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இரண்டாவது மாதமாக தொடர்ந்து வருகிற நிலையில், போராட்டத்துக்கு முடிவு கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் எந்த முடிவும் […]
இங்கிலாந்தில் பரவி வரும் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.இந்தியாவும் விமான சேவையை நிறுத்தியது.பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் […]
கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கிலோ மீட்டர் குழாய் வழி கியாஸ் வினியோக அமைப்பை பிரதமர் மோடி நாளை காணொளி மூலம் திறந்து வைக்கிறார். இந்த மூலம் குழாய் வழியாக தினமும் 1.2 கோடி கனமீட்டர் கேஸ் அனுப்ப முடியும். கெயில் நிறுவனம் இந்த கேஸ் குழாய் இணைப்பை உருவாக்கியுள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை இந்த குழாய் அமைப்பு கடந்து செல்கிறது. மொத்தம் ரூ. 3,000 கோடி […]
டெல்லியில் தெருக்களில் வசித்து வந்த தாய்-மகளை குடிபோதையில் வந்த இரண்டு பேர் கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளின் இரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் உதவி செய்வதற்குப் பதிலாக சம்பவத்தை வீடியோவை பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். இந்த வைரல் வீடியோவை பார்த்த போலீசார்நடத்திய விசாரணையில், அந்த பெண்ணிற்கு 35 வயதும், அவரது மகளும் சுமார் 18 வயது எனவும், ஊனமுற்றவர்கள் […]
ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளது மத்திய அரசு. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது. இதையடுத்து அண்மையில் […]
உலகின் மிகப்பெரும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உலகின் மிகப்பெரும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் நாம் உள்ளோம். முழு நாடும் நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவாதிகளுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. நமது நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளின் சேவைகள் மற்றும் பொருட்களின் தரம், உலகளவில் இந்தியாவின் வலிமையை நிர்ணயிக்கும்.எந்த ஒரு வளர்ந்துவரும் […]
நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை ஆன்லைன் மூலம் நடத்தலாமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தேசிய தேர்வு முகமை கடிதம். நீட் தேர்வை இரண்டு முறை நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க நீட் தேர்வை 2 முறை நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஒரே ஒரு முறை தேர்வு நடத்தப்பட்டால், அது மாணவர்களுக்கு மனா அழுத்தத்தை அதிகரிக்கும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், […]
பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தின் வருகையைக் கண்ட சியாம் சுந்தர் பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார். ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் சியாம் சுந்தர். இவரது மகளான ஜெஸ்ஸி பிரசாந்தி, 2018-இல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிபெற்று, துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய்பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி. இந்நிலையில், பிரசாந்தி திருப்பதியில் […]
கொரோனாவிற்கு மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த எட்டு நாட்களில் காகங்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது. இது குறித்து மாநில அரசும் எச்சரிக்கையாக உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் கால்நடை வளர்ப்பு மந்திரி லால்சந்த் கட்டாரியா கூறுகையில், மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அபாயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அவசரக் கூட்டம் வரவழைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை முழுமையாக கண்காணித்து வருகிறோம் என்று கூறினார். ஹடோடி பிராந்தியத்தில் ஏற்பட்ட மோசமான காய்ச்சல் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது உள்ள பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். இன்னும் ஒருசில மாதங்களில் மேற்கு வாங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக […]
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் 40 -வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகள் குளிர் மழையால் பாதிக்கப்பட்டு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. 16 மணி நேரத்திற்கு ஒருமுறை […]
மத்திய பிரதேசத்தில், தலைநகர் போபாலை தவிர, பிற பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகள் உட்பட, பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 225-க்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்து, கட்டுக்குள் […]
கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரகம் முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்திலுள்ள அட்டகுளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவரை […]
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி உள்ளன. ஆகவே அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் […]
உத்தரபிரதேசத்தில் காஜியாபாத்தின் முராத்நகர் பகுதியில் உள்ள கல்லறையில் மேற் கூரை இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி மற்றும் 20 பேர் காயம். உத்தரபிரதேசத்தில் ஒரு பழ வியாபாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க்க காஜியாபாத்தின் முராத்நகர் பகுதியில் உள்ள கல்லறைக்கு 50 க்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர்.இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது அங்கு நல்ல கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அங்குள்ள சிறிய மேற்குறையுடன் கூடிய நடைபாதை கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்பொழுதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது,ஏற்கனவே கனமழையால் […]
புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகம் நடத்தும் மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்கவுரை ஆற்றுகிறார். புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகம் தொடங்கி 74 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்த ஆய்வகம் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள்,‘தேசத்தின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அளவியல்’ ஆகும். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கவுரை ஆற்றவுள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது […]