UMANG செயலிக்கு குரல் கொடுக்க ஆள் தேவை என அரசாங்கத்தால் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பான், ஆதார், டிஜிலோகர், எரிவாயு முன்பதிவு, மொபைல் பில் செலுத்துதல், மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற பல வகை பயன்பாடுகளை கொண்ட UMANG செயலி பல லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசாங்க சேவைகளை மொபைலிலேயே வழங்க கூடிய இந்த செயலுக்கு குரல் கொடுக்க ஆள் தேவைப்படுகிறது. எனவே இது குறித்த அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவமும் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. […]
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ள நிலையில்,இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி,இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் ,சீரம் நிறுவனம் , ஃபைசர் நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்து உள்ளன. ஆக்ஸ்போர்டு […]
முதலாளி ஒருவருடன் அவரது காளை அவர் நடனமாடுவது போலவே நடனம் ஆடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகளில் ஒரு சில தவிர மற்ற அனைத்துமே மனிதர்களுடன் உறவாட கூடியதாக தான் இயற்கை அமைத்துள்ளது. கிளி கொஞ்சிபேசுவதும், குரங்கு விளையாடுவதும் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால், கொடூர மிருகங்களை கூட அன்பாலும் கட்டுப்படுத்த முடியும் என்பதும் தற்போதைய காலங்களில் வெளியாகக் கூடிய சமூக வலைதள வீடியோக்கள் மூலம் நாம் அறிந்து […]
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் காலமானார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் இன்று காலமானார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. இவர், அகாலிதள உறுப்பினராக தனது முதல் தேர்தலில் போராடி 1960 களில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். ராஜஸ்தானின் சாத்னா தொகுதியில் இருந்து 1962 இல் மூன்றாவது மக்களவையில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி வருத்தத்தைத் தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் […]
மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களை எதிர்த்து உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 38 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 30 -ஆம் தேதியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் மறு பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான திக்சன் சூட் டெல்லிக்கு விவசாயிகள் சுற்றுலா சென்றுள்ளதாக கருத்து தெரிவித்தார். […]
வசாயிகள் தங்கள் கோரிக்கைகளை ஜனவரி 4 ஆம் தேதி நிறைவேற்றவில்லை என்றால் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களுடன் ஒரு நேர்மறையான சந்திப்பை எதிர்பார்க்கிறார், மையத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை இறுதியானதா என்று அவர் கூற முடியாது. செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இப்போது உறுதியாக சொல்ல முடியாது. நான் ஒரு ஜோதிடர் அல்ல. கூட்டத்தில் எந்த முடிவும் […]
டெல்லி மட்டும் அல்ல ,நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆகவே கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டெல்லியில் நடைபெற்று வரும் ஒத்திகையை […]
இந்த ஆண்டு குடிஅரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு, இந்திய பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ராணுவ வீரர்கள், நோய்த்தொற்று கண்டறியப்பட்டதும் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 […]
சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிரந்தர வளாகத்திற்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஒடிசா ஆளுநர் மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் , மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஐஐஎம் சம்பல்பூரின் ஆசிரியர்கள் உட்பட 5000-க்கும் அதிகமானோர் காணொலி மூலம் இதில் கலந்து கொண்டுள்ளதாக […]
உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம். புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள் […]
கடந்த 2007–ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 % பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி விற்பனை செய்திருந்தது இது செபி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் மேலும் இரண்டு நிறுவனங்களுக்கும் செபி அபராதம் விதித்துள்ளது. இதன்படி, முகேஷ் அம்பானிக்கு செபி ரூ .15 கோடியும், முகேஷ் அம்பானியின் […]
ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) சம்பல்பூரின் நிரந்தர வளாகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஒடிசா ஆளுநர் மற்றும் முதல்வர், மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஐஐஎம் சம்பல்பூரின் ஆசிரியர்கள் உட்பட 5000-க்கும் அதிகமானோர் காணொலி மூலம் இதில் கலந்து […]
அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியிருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (FEMA) ஆகிய விதிகளை மீறியதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT), மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலிடம் புகாரளித்தனர். அதில், இந்த புகாரினை அமலாக்கத் துறைக்கும், தொழில் மற்றும் […]
கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கான ஒத்திகை இன்று மேற்கொள்ளப்படுகிறது.இந்த ஒத்திகை அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், […]
ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் மீண்டும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் […]
மீண்டும் இந்தியா – பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருவதால், இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, […]
கேரளாவில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்க அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் சுமார் 9 மாதங்களுக்கு பின் நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது மேலும் சில […]
கடந்த ஆண்டு முடிவுக்கு வந்ததை போலவே, ஹைதராபாத் நகர காவல்துறையினரும் 2020-ல் காணாமல் போன அல்லது திருடப்பட்ட 135 மொபைல் போன்களை கண்டுபிடித்து அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் 135 பேர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதுகுறித்து ஒருவர் கூறுகையில், எனது சேமிப்பு பணத்தில் இருந்து பிப்ரவரி மாதத்தில் ஒன்பிளஸ் போன் ரூ .38,000 க்கு வாங்கினேன். இதனால், எனது முதல் ஸ்மார்ட்போன் மற்றும் எனக்கு ஒரு கனவு நனவாகியது. போன் வாங்கிய 20 நாட்களுக்குள் எனது […]
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ஜனவரி 2ம் தேதி நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. இந்தியாவை பொறுத்தளவில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் […]
இந்தியாவில் தற்போது உருமாறிய கொரோனாவால் தற்போது 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனியில் இருந்து திரும்பிய பயணிகளை கண்டறியும் பணிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது.பின்பு சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 4 பேருக்கு உருமாறிய […]