மீண்டும் தொடங்குகிறது இந்தியா – பிரிட்டன் இடையே விமான சேவை.!

The Central Government has announced that the first flight between India and Britain will start on the 8th.

மீண்டும் இந்தியா – பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருவதால், இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தியா – பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். ஜனவரி 23-ம் தேதி வரை வாரத்துக்கு 15 விமானங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

unknown node