9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்ட்டுள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, அனைத்து அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு அதிகரிக்கவும், அவர்களின் ஓய்வூதிய வயதை தற்போதுள்ள 58 வயதிலிருந்து உயர்த்தியுள்ளார். யாருக்கெல்லாம் சம்பள உயர்வு: அதாவது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், உதவி உதவி ஊழியர்கள், வேலை வசூலிக்கும் ஊழியர்கள், தினசரி ஊதிய ஊழியர்கள், முழுநேர நிரந்தர ஊழியர்கள், பகுதிநேர நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் […]
பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7 ஆம் தேதி வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு, ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை […]
இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் தற்பொழுது மீண்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உலக அளவில் அதிக பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் தாக்கமே குறையாத நிலையில் இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது புதிதாக உருவெடுத்து மேலும் அதிகமான பாதிப்பு கொண்ட நோயை பரப்புகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை […]
நொய்டாவில் வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரே இடத்தில் 100 பேர் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்பதிவுடன் கூடலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக உலகில் உள்ள அனைத்து மக்களுமே தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்பொழுது வரையிலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், பண்டிகை காலங்களில் மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகளை கொடுத்து வந்தாலும் கொரோனா வைரஸ் […]
டெல்லியில் நடைபெற்ற ஈ.டி.எம்.சி ஹவுஷில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இணையத்தில் வைரலாகும் வீடியோ. பொதுவாகவே கட்சிக் கூட்டங்கள் என்றால் என்றாலே வாக்குவாதங்கள் மோதல்கள் ஏற்படுவது சகஜமாகி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஈ.டி.எம்.சி ஹவுஷில்ல்நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இதனை அடுத்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோகினி ஜீன்வால் மற்றும் மனோஜ் குமார் தியாகி ஆகியோர் 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். குடிமை அமைப்புகளின் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் போலீசாருக்கு வாராந்திர பயணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், பவுரி கர்வால், தெஹ்ரி கர்வால், ருத்ரபிரயாக், சாமோலி, சம்பாவத், பித்தோராகர், உத்தர்காஷி, அல்மோரா மற்றும் பாகேஷ்வர் ஆகிய ஒன்பது மலை மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட தலைமை-கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு வாராந்திர பயணங்கள் வழங்கப்படும்.இது குறித்து டிஜிபி அசோக் குமார் கூறுகையில், ஆரம்ப கட்டத்தில் மலை மாவட்டங்களில் ஒரு பரிசோதனையாக இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.”இந்த நடவடிக்கை கடமையில் இருக்கும்போது அவர்களின் […]
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின்முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, முதல் தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியினர் தற்பொழுதே தொடங்கிவிட்டனர். இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார். அதன்படி, இம்மாதத்தில் கட்சியின் இணைந்த கண் மருத்துவர் டாக்டர் அப்துல் மன்னன், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக இன்று மதியம் 2 மணிக்கு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 35 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கேயே அவர்கள் உணவு சமைத்து, அதனை உண்டும் வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், […]
பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அது காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட […]
பாஜக தலைவர், மருமகனின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் வழிகாட்டுதல்களை மீறியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு அரசு […]
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களில் 70% ஆண்கள் என பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்களில் 45% கொரோனாவால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், இதுவரை மொத்தமாக கொரோனாவால் 63% ஆண்களும், 37% பெண்களும் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், மொத்த உயிரிழப்புகளில் 39 சதவீதம் 26-44 வயதுக்குட்பட்டவர்களும், 52 சதவீதம் 18-44 வயதுக்குட்பட்டவர்களும் உள்ளன, ஆறு மாதங்களுக்குப் பிறகு தினசரி உயிரிழப்பு 300 க்கும் குறைவாக உள்ளதாக கூறினார். ஆறு […]
ராஷ்டிரிய சுயம் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் இன்று சலப்புரத்தில் ‘கேசரி ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில், 1951-ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கிய சங்க பரிவார் இணைந்த வார இதழான ‘கேசரி’ என்பது “பாரதத்தின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட” சில எண்ணங்களின் கூற்று என தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் ‘கேசரி’ பயணம் வசதியானதல்ல என்றும் இந்த உண்மையை தற்போதைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் […]
நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா இன்று உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹால்ட்வானியில் திறக்கப்பட்டது. இந்த பூங்காவை பட்டாம்பூச்சி நிபுணர் பீட்டர் ஸ்மேடசெக் திறந்து வைத்தார். மேலும், இது சுமார் 50 வெவ்வேறு மகரந்தச் சேர்க்கை இனங்களைக் கொண்டுள்ளது. இதில் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் பிற பூச்சிக்களும் நிறைந்துள்ளது. இது குறித்து, வன (ஆராய்ச்சி) தலைமை கன்சர்வேட்டர் சஞ்சீவ் சதுர்வேதி கூறுகையில், “பல்வேறு மகரந்தச் […]
எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு இலவச வைஃபையை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை அறிவித்துள்ளது. இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதா, முதல் வைஃபை சேவை 24-48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றார். இதற்கிடையில், விவசாயிகள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதில் சிரமங்களை […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான ரூ.1,100 கோடி செலவாகும் என்று ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கூறியுள்ளார். ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயிலின் முழு கட்டுமானமும் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறியுள்ளார். ராமர் கோயில் மட்டும் கட்டுவதற்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி என்றும் கோவில் முழு வளாகமும் கட்ட ரூ.1,100 கோடிக்கும் […]
வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியாவிற்கு வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது 70% அதிக வேகத்துடன் பரவும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தன. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் […]
நியூ பாபூர் – நியூ குர்ஜா வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 351 கி.மீ நீளமுள்ள நியூ பாபூர் – நியூ குர்ஜா ரயில் போக்குவரத்து வழித்தடம் உத்தரப்பிரதேசத்தில் ரூ.5,750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடம், கான்பூர்- டெல்லி இடையில் உள்ள முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.குறிப்பாக இந்திய ரயில்வே விரைவு ரயில்களை இயக்க வழிவகுக்கும். இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் கிழக்கத்திய […]
குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக மக்களவை எம்.பி. மன்சுக் வாசவா தெரிவித்துள்ளார். நேற்று பருச்சில் இருந்து பாஜக எம்.பி மன்சுக்பாய் தஞ்சிபாய் வாசவா குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் கட்சிக்கும், கட்சியின் மத்திய தலைவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நான் என்னால் முடிந்தவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். அதே நேரத்தில், கட்சி மற்றும் வாழ்க்கையின் கொள்கையைப் பின்பற்றுவதில் மிகுந்த கவனம் தேவை, ஆனால் இறுதியில் நான் […]
அரசு எஞ்சினியர் ரம்பவன், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் அரசு இன்ஜினியராக பணியாற்றி வருபவர் ரம்பவன். இவர் கடந்த மாதம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 5 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் ஆகிய 3 மாவட்டங்களை […]
காரில் டிரைவர் இருக்கை மட்டுமின்றி, பக்கத்தில் இருக்கும் இருக்கைக்கும் ஏர்பேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய காலத்தில் காரில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக, பட்ஜெட் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். நாம் காரில் செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நமது உயிரை காப்பதில் அதிகம் பங்காற்றுவது, சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகும். இந்த ஏர்பேக்கின் வேலை என்னவென்றால், நமது கார் விபத்தில் சிக்கும்போது அந்த ஏர்பேக்குகள் விரிந்து, காரில் பயணிக்கும் […]