சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், தினமும் ஆட்டிறைச்சி விலையை நிர்ணயித்து அறிவிக்கும் வகையில் ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த முயற்சி, மாநிலம் முழுவதும் ஆட்டிறைச்சி விலையில் ஒரே மாதிரியான தன்மையை உறுதி செய்வதோடு, வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான விலை நிர்ணயத்தை வழங்கும். இந்த அறிவிப்பு, ஜூன் 26, […]
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பொது, வடமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரையில் நிலவிய காற்றுச்சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை […]
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,”அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மதநல்லிணக்கத்தோடு வாழும் தமிழ்நாட்டில் மதத்தை பயன்படுத்தி எதுவுமே செய்யமுடியவில்லையே என்று கதறுகிறது மதவாத கூட்டம். தமிழ்நாடு பெரியார், அண்ணா, கலைஞரின் மண். இங்கு மத அரசியல் எடுபடாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமர் […]
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது இஸ்ரோ, நாசா, ஆக்சியம் ஸ்பேசின் கூட்டு முயற்சியாக மனிதர்களை ISS-க்கு அனுப்பும் ஆக்சியம்-4 திட்டமாகும். இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டனர். இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை […]
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.68.76 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் விழா மேடையில் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 […]
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ், ”தாம் உயிருடன் இருக்கும் வரை, பாமகவுக்கு தாம்தான் தலைவர் என்று கூறினார். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தது போல, தாமும் பாமக தலைவராக இருப்பேன்” என்றும் ராமதாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். அன்புமணி குறித்த கேள்விக்கு, ”அவர் தான் சொல்வது போல கேட்டாக வேண்டும். அன்புமணி செயல் தலைவராக மட்டுமே கட்சியில் நீடிப்பார். மு.க.ஸ்டாலின் […]
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்த மீனவர்கள் இரண்டு பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி, மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதல் நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதேபோன்ற சம்பவங்கள் இலங்கை கடற்படையினரால் தமிழக […]
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டன. இந்த நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாகவும், சண்டை தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்றும் எச்சரித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். அதிபர் டிரம்ப் எங்கு சென்றாலும் சரி இந்தக் கூற்றை முன்வைக்கும் எந்த வாய்ப்பை தவறவிடுவதில்லை போல் […]
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்றைய தினம் கேரளாவில் கன மழையை தொடர்ந்து இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மிக அதிக மழை பெய்யும் (24 மணி நேரத்தில் 12–20 செ.மீ) என்பதைக் குறிக்கிறது. மேலும், பத்தனம்திட்டா, கோட்டயம், […]
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். கத்தோலிக்க விடுமுறையான ஜான் பாப்டிஸ்ட் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மக்கள் கூடியிருந்த இடத்தில துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கொண்டாட்டத்தின் போது, மக்கள் தெருவில் நடனமாடியும் மது அருந்தியும் கொண்டிருந்தனர். தற்போது, துப்பாக்கிச் […]
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது போதையில் ஆபாச நடனம் ஆடியதாகவும், பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறியதாகவும் கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகராகப் பணியாற்றும் கோமதிநாயகம் (வயது 30) உள்ளிட்ட சில பூசாரிகள் […]
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், மழையின் தாக்கம் இங்கு அதிகமாக உள்ளது. ஏற்கனவே, நேற்றும் இன்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் நலன்கருதி, வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக […]
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணம் பல தடைகளுக்கு பின், இறுதியாக நேற்றைய தினம் மதியம் 12:01 மணி அளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. நாசாவின் தகவலின்படி, ஆக்ஸியம்-4 குழுவினரை ஏற்றிச் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் இப்பொது […]
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள் மோதிக்கொண்டது இது உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மோதலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரானின் மூன்று அணு ஆயுதத் தளங்களை (ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்ஃபஹான்) குண்டுவீசி தாக்கின. டிரம்ப், இந்தத் தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழித்துவிட்டதாகக் கூறினார், ஆனால் அமெரிக்க உளவுத்துறை, அந்தத் தளங்கள் முழுமையாக அழியவில்லை, சில […]
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதியை உறுதி செய்வதோடு, அவர்களின் திறமைகளை அரசு பணிகளில் மேலும் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு, உடலில் 40 […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth Social தளத்தில் பதிவிட்டார், இது அவரது நிர்வாகத்தின் முந்தைய கொள்கையில் இருந்து திடீர் மாற்றமாக உள்ளது ஹாட் டாப்பிக்கான ஒரு செய்தியாகவும் மாறியுள்ளது. “சீனா இப்போது ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரலாம். அவர்கள் அமெரிக்காவிடமிருந்தும் நிறைய எண்ணெய் வாங்குவார்கள் என்று நம்புகிறேன். இதை சாத்தியமாக்கியது எனக்கு பெருமை!” என்று தன்னுடைய பதிவில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, […]
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் குளித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியான சூழலில், பா.ம.க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். புறகு அவர் நலமுடன் சிகிச்சை பெற்று மீண்டு வரவேண்டும் என அன்புமணியும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். பிறகு அருள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று விடும் திரும்பினார். இதனையடுத்து இன்று […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவலை கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். சுற்றுப்பயணம் தஞ்சாவூரில் தொடங்கி, 42 நாட்களில் 38 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, தவெகவின் மாவட்ட […]
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு நாடுகளும் நீங்க தான் போர் ஒப்பந்தத்தை மீறினீர்கள் என ஒருவரை ஒருவர் மீறல் செய்ததாக குற்றம்சாட்டினாலும், இப்போது 11-நாட்களுக்கு பிறகு அங்கு நிலைமை கொஞ்சம் அமைதியாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு தரப்பையும் கண்டித்து, அமைதியை காக்குமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு அமைதியான சூழல் மெல்ல மெல்ல பழையபடி திரும்பிக்கொண்டு இருக்கிறது. ஜூன் […]
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன் 25) வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு (2024) ஜூலை 30ஆம் தேதி இதே பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த துயர சம்பவம் நடந்து 1 ஆண்டுகள் ஆக போகும் நிலையில், மீண்டும் அதே போலவே வெள்ளம் ஏற்பட்டுள்ளது […]