அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI-171 விமானம் சில வினாடிகளில் விபத்துக்குள்ளானது. 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் மேகனி நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதி வெடித்தது. இந்த விபத்தில் 241 பயணிகள் மற்றும் 33 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட மொத்தம் 274 பேர் […]
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மாநாடு நன்றாக […]
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள் மோதிக்கொண்டது இது உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மோதலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரானின் மூன்று அணு ஆயுதத் தளங்களை (ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்ஃபஹான்) குண்டுவீசி தாக்கின. டிரம்ப், இந்தத் தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழித்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அமெரிக்க உளவுத்துறை, அந்தத் தளங்கள் முழுமையாக அழியவில்லை, […]
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) வெற்றிகரமாக அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயணத்தில் சுக்லாவுடன், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன் (அமெரிக்கா), ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி (போலந்து), மற்றும் திபோர் கபு (ஹங்கேரி) ஆகியோர் பயணித்தனர். இந்த பயணம், தொழில்நுட்ப பிரச்சினைகளால் ஆறு முறை தடைபட்ட பின்னர், ஜூன் […]
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாகவே களத்தில் இறங்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களால் ஈரான் அணு உலை மையங்கள் பெருமளவு சேதமடைந்ததாக முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஜூன் 22-ஆம் தேதி அன்று, அமெரிக்காவின் B-2 குண்டுவீசி விமானங்கள் ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகளைப் பயன்படுத்தி, ஈரானின் மூன்று முக்கிய […]
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு செய்தி பரவி கொண்டு இருந்தது. அது என்னவென்றால், வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தீயாக பரவியது. இதனை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி உண்மையா? என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இதனையடுத்து. தேசிய […]
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், இந்தி மொழி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது இல்லை என்று தெளிவாகக் கூறினார். இந்தி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தோழமையாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தையும் மொழி வளத்தையும் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதே சமயம், இந்தி மற்ற மொழிகளை ஒடுக்காமல், அவற்றுடன் இணைந்து […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், தினமும் ஆட்டிறைச்சி விலையை நிர்ணயித்து அறிவிக்கும் வகையில் ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த முயற்சி, மாநிலம் முழுவதும் ஆட்டிறைச்சி விலையில் ஒரே மாதிரியான தன்மையை உறுதி செய்வதோடு, வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான விலை நிர்ணயத்தை வழங்கும். இந்த அறிவிப்பு, ஜூன் 26, […]
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பொது, வடமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரையில் நிலவிய காற்றுச்சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை […]
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,”அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மதநல்லிணக்கத்தோடு வாழும் தமிழ்நாட்டில் மதத்தை பயன்படுத்தி எதுவுமே செய்யமுடியவில்லையே என்று கதறுகிறது மதவாத கூட்டம். தமிழ்நாடு பெரியார், அண்ணா, கலைஞரின் மண். இங்கு மத அரசியல் எடுபடாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமர் […]
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது இஸ்ரோ, நாசா, ஆக்சியம் ஸ்பேசின் கூட்டு முயற்சியாக மனிதர்களை ISS-க்கு அனுப்பும் ஆக்சியம்-4 திட்டமாகும். இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டனர். இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை […]
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.68.76 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் விழா மேடையில் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 […]
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ், ”தாம் உயிருடன் இருக்கும் வரை, பாமகவுக்கு தாம்தான் தலைவர் என்று கூறினார். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தது போல, தாமும் பாமக தலைவராக இருப்பேன்” என்றும் ராமதாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். அன்புமணி குறித்த கேள்விக்கு, ”அவர் தான் சொல்வது போல கேட்டாக வேண்டும். அன்புமணி செயல் தலைவராக மட்டுமே கட்சியில் நீடிப்பார். மு.க.ஸ்டாலின் […]
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்த மீனவர்கள் இரண்டு பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி, மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதல் நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதேபோன்ற சம்பவங்கள் இலங்கை கடற்படையினரால் தமிழக […]
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டன. இந்த நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாகவும், சண்டை தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்றும் எச்சரித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். அதிபர் டிரம்ப் எங்கு சென்றாலும் சரி இந்தக் கூற்றை முன்வைக்கும் எந்த வாய்ப்பை தவறவிடுவதில்லை போல் […]
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்றைய தினம் கேரளாவில் கன மழையை தொடர்ந்து இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மிக அதிக மழை பெய்யும் (24 மணி நேரத்தில் 12–20 செ.மீ) என்பதைக் குறிக்கிறது. மேலும், பத்தனம்திட்டா, கோட்டயம், […]
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். கத்தோலிக்க விடுமுறையான ஜான் பாப்டிஸ்ட் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மக்கள் கூடியிருந்த இடத்தில துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கொண்டாட்டத்தின் போது, மக்கள் தெருவில் நடனமாடியும் மது அருந்தியும் கொண்டிருந்தனர். தற்போது, துப்பாக்கிச் […]
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது போதையில் ஆபாச நடனம் ஆடியதாகவும், பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறியதாகவும் கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகராகப் பணியாற்றும் கோமதிநாயகம் (வயது 30) உள்ளிட்ட சில பூசாரிகள் […]
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், மழையின் தாக்கம் இங்கு அதிகமாக உள்ளது. ஏற்கனவே, நேற்றும் இன்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் நலன்கருதி, வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக […]
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணம் பல தடைகளுக்கு பின், இறுதியாக நேற்றைய தினம் மதியம் 12:01 மணி அளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. நாசாவின் தகவலின்படி, ஆக்ஸியம்-4 குழுவினரை ஏற்றிச் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் இப்பொது […]