புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி […]
மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் மாவட்டத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்ட பின்னர் பேசிய அவர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை வரிசையாக பட்டியலிட்டார். இதுபோல் அதிமுக செய்த திட்டங்களை சொல்ல முடியுமா என்றும் முதல்வர் பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடும் என்று […]
காணொலி காட்சி மூலம் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம், சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் […]
இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கீரிட் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கிராமத்தில் வசிக்கு வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கீரிட் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்தால் வாக்குறுதிகளை திமுகவினர் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். தேர்தல் நேரத்தில் தரப்படும் வாக்குறுதிகளை அதிமுக உடனே நிறைவேற்றும் என்றும் ஏழை மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி அதிமுகதான் எனவும் கூறியுள்ளார் […]
என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களில் மத்தியில் பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஒருநாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் முத்தயாபேட்டையில் மீனவ மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி வரும் ராகுல் காந்தி, என் தந்தையை இழந்தது […]
டெல்லியில் பிரிவு உபசரிப்பு விழாவில் எம்பி திருச்சி சிவா, இந்தி பாடலை பாடியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் கடந்த வாரம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு திமுக எம்பி திருச்சி சிவா டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் நடத்திய பிரிவு உபசரிப்பு விழாவில் இந்தி கச்சேரி கலைக்கட்டியது. இந்த கச்சேரியில் பங்கேற்று திருச்சி சிவா, கபி.. கபி.. மேரா தில் மே.. என்று இந்தி பாடல் […]
அரசியல் கட்சிகளுக்கு பட்டியலை வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழகத்தில் தபால் வாக்கு முறை பின்பற்றப்படும் என்றும் மூத்த குடிமக்களுக்கு மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தது. தபால் வாக்கு முறையை அமல்படுத்துவது எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக திமுக கே.என் நேரு உயர்நீதிமன்றத்தில் […]
நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநாராக பொறுப்பேற்கிறார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி பல குற்றச்சாட்டு இருந்தது. அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில […]
தமிழகம் முழுவதும் வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும், வருகின்ற 19ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான […]
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெருமான்மை இல்லாத சூழலில், முதல்வர் நாராயணசாமியுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரியில் அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் மொத்தம் 30 இடங்களில் 19 காங்கிரஸ் கூட்டணி இருந்த நிலையில், தற்போது 14 ஆக குறைந்து, ஆட்சி நீடுக்கமா என்று குழப்பம் நிலவி வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு 14 எம்எல்ஏக்களின் ஆதரவு […]
திருச்சி திருவானைக்கோவில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து திருவிழாவை நடத்த உத்தரவிடக்கோரி பத்மநாபன் என்பவர் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்காக அல்ல, இறைவனை வணங்க செல்பவர்கள் மனிதாபிமானத்துடன் இருப்பதுதான் முக்கியம். எந்தவித ஏற்றத்தாழ்வு, பாகுபாடும் கடவுள் பார்ப்பதில்லை. மனிதர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதை கடவுள் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினருடன் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் – ஆம் ஆத்மி கட்சி கூட்டணி பங்கீடு குறித்து கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை தொடங்கியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர […]
சட்டப்பேரவை தேர்தல் முன்ஏற்பாடு குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நாளை காணொலி மூலம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு முறையை செயல்படுத்த தொகுதிக்கு 12 குழுக்கள் அமைக்க முடிவு […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்ரவரி 22ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பிப்.22 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். தினமும் பெட்ரோல், டீசல் விலை போட்டி போட்டு கொண்டு பந்தய குதிரை போல் எகிறுகின்ற இந்த […]
நாராயணசாமி தலைமையிலான காங்கிரசுக்கு இன்னும் மூன்று மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள் அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகிய நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10-ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் திமுக 3 , ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளும் காங்கிரசின் பலம் 14-ஆக உள்ளது. எதிர்க்கட்சிகள் என்ஆர் காங்கிரஸ்-7, […]
ஒருநாள் பயணமாக புதுச்சேரி செல்லும் வழியில் சென்னை வந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஒருநாள் பயணமாக புதுச்சேரி செல்ல சென்னை விமான நிலையம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் ராகுல் காந்தி.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழ் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் இதனை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் […]
திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தது என்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அதிமுக திட்டங்கள் மற்றும் சாதனை பட்டியலை விளக்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபுரம் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை தூர் வார ரூ.120.23 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. தமிழக ஏரிகளிலேயே இரண்டாவது பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை தூர் வாரினால் 7,604 ஏக்கர் நிலம் பயன்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதராந்தகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், ஏரியை தூர் வார நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நபார்டு வங்கியின் கடனை கொண்டு ஏரியை தூர் வாரி 3,950 மீட்டர் நீளமுள்ள […]
பிளஸ் டூ தேர்வு தொடங்கும் மே3-ம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3-ஆம் தேதி தொடங்கி மே 21 முடிவடைய உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு தேதி அறிவித்ததில் எந்தக் குழப்பமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே தேர்வு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது […]